கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

10 கோடி பார்வைகளைக் கடந்த நடிகர் விஜய் பட பாடல்: ரசிகர்கள் குஷி

நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்த கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

10 கோடி பார்வைகளைக் கடந்த நடிகர் விஜய் பட பாடல்

Published On :

நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்த கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'செல்பி புள்ள’ பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் சமந்தா நடித்து வெளியான திரைப்படம் கத்தி. 2014ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். 

கிராமத்தின் தண்ணீர் வளத்தை அபகரிக்க முயலும் பெருநிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராடும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ’செல்பி புள்ள’ பாடல் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருந்து வந்தது.  இந்நிலையில் யூடியூப்பில் வெளியான இந்தப் பாடல் இதுவரை 10 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

3.55 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ள இந்தப் பாடலில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

10 கோடி பார்வைகளைக் கடந்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்