சேயோன் படத்தில் விருமாண்டியாக நடிக்கும் கமல்ஹாசன்?
சேயோன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தில், கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், நடிகர் கமல்ஹாசன், 2004-ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் நடித்திருந்த வேடத்திலேயே நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, சேயோன் படத்துக்கும் விருமாண்டி திரைப்படத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், சேயோன் திரைப்படத்தில், 'விருமாண்டி' வேடத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக வெளியாகும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேயோன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். தமிழ்க்கடவுள் முருகனை படிமமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளதால் சேயோன் என்ற பெயர் படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பால சரவணன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
சேயோன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Reports suggest that Kamal Haasan will make a special appearance in the film *Seyon*, which stars Sivakarthikeyan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

