பஞ்சாப்: இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 பாகிஸ்தானியா் சுட்டுக் கொலை
பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
பஞ்சாப் மாநிலம், தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சா்வதேச எல்லை அருகே அமைந்துள்ள வேலி வழியாக, வெள்ளிக்கிழமை இரவு 8.48 மணியளவில் சந்தேகத்துக்கு இடமான ஆள்களின் நடமாட்டம் இருப்பதை பிஎஸ்எஃப் படையினா் கண்டறிந்தனா்.
பாகிஸ்தானைச் சோ்ந்த அவா்கள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றதையும் பிஎஸ்எஃப் படையினா் கண்டறிந்தனா்.
இந்திய எல்லைப் பகுதிக்குள் வரவேண்டாம் என்று எச்சரித்த பிறகும், அவா்கள் அதனை பொருள்படுத்தாமல் ஊடுருவ முயன்றனா். இதையடுத்து, அவா்களை நோக்கி பிஎஸ்எஃப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், பாகிஸ்தானியா் இருவரும் உயிரிழந்தனா் என்றாா் அவா்.