பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை
கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாபல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை
கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கோத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி என்ற பகுதியில், வெள்ளிக்கிழமையன்று பல் மருத்துவம் பயின்று வந்த மாணவியை, 24 வயது நபர் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பலியான மாணவி மானசா (24) என்பதும், கொலையாளி ராகில் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மானசா, கோத்தமங்கலத்தில் உள்ள இந்திரா காந்தி கல்லூரியில் பல் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இருவரும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்துள்ளது. இருவருக்கும் இடையே இருந்த தனிப்பட்ட விரோதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாணவி, கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் பணம் கொடுத்து தங்கும் விருந்தாளியாக தங்கியிருந்த நிலையில், நேற்று அந்த வீட்டுக்குள் நுழைந்த நபர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது மகளை தொந்தரவு செய்வதாக, மானசாவின் பெற்றோர் ஏற்கனவே ராகில் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.