இந்தியா

'கரோனா விகிதம் 5% ஆகக் குறையும் வரை கர்நாடகத்தில் தளர்வு வேண்டாம்'

DIN


பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகும், மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் ஒரு நாள் கரோனா பாதப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாகவும், கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாறும்வரை மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் குழுவினர், ஞாயிறன்று கூடி ஆலோசனை நடத்தி, தங்களது பரிந்துரைகளை திங்களன்று அளித்தனர். இது குறித்து முதல்வர் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசன நடத்தி முடிவுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT