முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை: சுகாதாரத் துறை

ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
ராஜஸ்தானில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை: சுகாதாரத் துறை
பகிர்:

ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பதே இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில் முன்களப் பணியாளர்கள், மூத்தக் குடிமக்களைத் தொடர்ந்து, 18 முதல் 45 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தடுப்பூசிக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், அவற்றை வீணாக்காமல் சிக்கனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கரோனா தடுப்பூசி வீண் என்பதே இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ராஜஸ்தானில் மே 28-ம் தேதி வரை 1.66 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 முதல் 45 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தடுப்பூசி வீண் என்பது ’0’ சதவிகிதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோது 2 சதவிகிதம் தடுப்பு மருந்து வீணானது. அது இம்முறை தவிர்க்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்துகளை கையாள்வதில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.