முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி; 5 பேர் காயம்

சரக்கு வாகனம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில், 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

Updated On : 2 ஜூன், 2021 at 3:39 PM
மத்தியப் பிரதேச சாலை விபத்தில் 5 பேர் பலி; 5 பேர் காயம்
பகிர்:


குவாரியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே ஜௌராசி கதி என்ற பகுதியில், சரக்கு வாகனம் வளைவில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில், 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது.  நயாகோன் பகுதியைச் சேர்ந்த கோவிந்ததாஜ் சாஹு மற்றும் அவரது நண்பரும் தங்களது குடும்பத்தினருடன் குவாலியருக்கு நர்வாரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இவர்கள் கோதுமை ஏற்றப்பட்ட சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் லாரி சாலை வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.