ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள்: தெலங்கானா முதல்வர் வாழ்த்து 
இந்தியா

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள்: தெலங்கானா முதல்வர் வாழ்த்து

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளையொட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

IANS

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாளையொட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முதல்வர் சந்திரசேகர ராவ், இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழிசை சௌந்திரராஜனுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது தெலங்கானா மாநிலம் உதயமான நாளுக்கு, சந்திரசேகர ராவுக்கு தமிழிசை தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

புதுவையில் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும், தெலங்கானாவில் ஆளுநராகவும் உள்ள தமிழிசை செளந்தரராஜனின் பிறந்த நாள், ஜூன் 2-ஆம் தேதியாகும். இன்று தெலங்கானா மாநிலம் உதயமான நாளும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புதுச்சேரியிலிருந்து விமானம் மூலம் தெலங்கானாவுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, அவரை ஆளுநா் மாளிகையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தாா். சட்டப் பேரவை தற்காலிகத் தலைவா் க.லட்சுமிநாராயணனும் ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். அவா்களுக்கு துணை நிலை ஆளுநா் தமிழிசை நன்றி தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT