மகாராஷ்டிரத்தில் மேலும் 15,229 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் மேலும் 15,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 15,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,229 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,791,413ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 307 பேர் பலியானார்கள்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 97,394ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,04,974 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 25,617 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,486,206ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 2,60,032 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 35,774,626 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.