உத்தரப்பிரதேசத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து 
இந்தியா

உத்தரப்பிரதேசத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ANI

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருப்பதாக துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சுமார் 26,09,501 பேர் தேர்வெழுதவிருந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றன.

ஏற்கனவே குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT