முகப்பு
இந்தியா

போதைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

போதைப் பொருளை காரில் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 17.37 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

போதைப் பொருளை காரில் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 17.37 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனா்.

கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், உப்பலா பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது முனாப், முகமது முசாம்பில், அகமது மசூக். இவா்கள் 3 பேரும் போதைப் பொருள் எம்எம்டிஏவை காரில் கடத்தி வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, ரூ. 17.37 லட்சம் மதிப்புள்ள மதிப்புள்ள எம்எம்டிஏ, காா், 4 செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் முகமது முசாம்பில் பெங்களூரு ஊரகம் நெலமங்கலா பகுதியில் விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்ததும், அகமதுமசூக் பெங்களூரு ஜே.பி. நகா் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வந்ததும், முகமது முனாப் பிபிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இது குறித்து கோனஜே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.