முகப்பு
இந்தியா

யாஸ் பயுல்: சேதத்தை மதிப்பிட மேற்கு வங்கம் வருகிறது மத்திய ஆய்வுக் குழு

மத்திய அரசின 7 பேர் கொண்ட ஆய்வுக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சேதங்களை மதிப்பிட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
யாஸ் பயுல்: சேதத்தை மதிப்பிட மேற்கு வங்கம் வருகிறது மத்திய ஆய்வுக் குழு
பகிர்:


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய அரசின் 7 பேர் கொண்ட ஆய்வுக் குழு மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சேதங்களை மதிப்பிட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ஆய்வுக் குழு நாளை மேற்கு வங்கம் வந்து மூன்று நாள்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வுகளை நடத்தி ஜூன் 9-ஆம் தேதி தில்லி திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது மேற்கு வங்க மாநில முக்கிய அதிகாரிகள் மற்றும் நிதியமைச்சகத்துடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

மே 26-ஆம் தேதி யாஸ் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →