ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது வேகமாக பரவியது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்கள் மட்டும் தளர்களுடன் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
இந்த நிலையில் ஹிமாச்சலில் ஜூன் 14 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அரசு பிளஸ் 2 பொதுதேர்வை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹிமாச்சலில் நேற்று ஒரேநாளில் 148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் பலியாகியுள்ளனர்.