தில்லியில் மேலும் தளர்வுகளை அறிவிக்கிறார் அரவிந்த் கேஜரிவால்
தில்லியில் கொண்டு வரப்படவிருக்கு தளர்வுகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புது தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் தில்லியில் கொண்டு வரப்படவிருக்கு தளர்வுகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இன்று செய்தியாளர்களை சந்திக்கவிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புது தில்லியில் கொண்டு வரப்படும் தளர்வுகளுடன், மூன்றாம் அலையை எதிர்கொள்வது குறித்தும் விவரிப்பார் என்று எதிரபார்க்கப்படுகிறது.
ஜூன் 7 முதல் தில்லியில் சந்தைகள் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.