முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 320 பேர் கரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் மேலும் 320 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
கோப்புப்படம்
பகிர்:


கர்நாடகத்தில் மேலும் 320 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 12,209 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 25,659 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 320 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,95,523 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24,09,417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 31,580 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 2,54,505 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்ற பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.71 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. இறப்பு விகிதம் 2.62 சதவிகிதம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.