மும்பையில் மீண்டும் பேருந்து சேவை: வரிசையில் காத்திருந்து பயணம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் பேருந்துகளில் பயணிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் முழு முடக்கம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பணிகளுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், கிருமிநாசினி வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.