கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் பரிசு 
இந்தியா

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க நாணயம், ஃபிரிட்ஜ் பரிசு

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று பிகார் மாநிலம் ஷீஹோர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

IANS

பாட்னா: 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று பிகார் மாநிலம் ஷீஹோர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டத்துக்குள்பட்ட பல கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது, ஜூலை 15க்குள் 45 வயதுக்கு மேற்பட்டிருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுவாக பருவமழைக் காலத்தில் ஷீஹோர் மாவட்டம் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதி. மழைக்காலம் தொடங்கிவிட்டால் பல கிராமங்களுக்குச் செல்லவே முடியாது. 

இங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவேதான் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதன்படி ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

வங்கதேசம்: வென்டிலேட்டரில் கலீதா ஜியா

SCROLL FOR NEXT