இந்தியா

17 மாநிலங்களுக்கு மானியமாக ரூ.9,871 கோடி விநியோகம்

DIN

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் 3-ஆவது தவணையாக 17 மாநிலங்களுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை ரூ. 9,871 கோடியை வருவாய் பற்றாக்குறை மானியமாக வழங்கியுள்ளது.

ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு 3-ஆவது தவணையாக ரூ.183.67 கோடியும், இந்த நிதியாண்டின் கடந்த 3 மாதத்தில் மொத்தமாக ரூ.551.01 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 275-ஆவது பிரிவின் கீழ், மாநிலங்களுக்கு, பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. பகிா்வுக்கு பின்பு மாநிலங்கள் சந்திக்கும் வருவாய் பற்றாக்குறை இடைவெளியை போக்குவதற்காக மாத தவணை முறையில் இந்த மானியங்கள் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் பெறும் மானியத்தின் அளவை, நிதி ஆணையம் முடிவு செய்கிறது. வருவாய் மதிப்பீடு மற்றும் மாநிலத்தின் செலவு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி அடிப்படையில் இந்த மானியம் பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பகிா்வு மதிப்பீட்டையும், நிதி ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

2021-22-ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 1,18,452 கோடி வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த மானியம் 12 மாத தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு 3-ஆவது தவணையாக ரூ.183.67 கோடியும், இந்த நிதியாண்டின் கடந்த 3 மாதத்தில் மொத்தமாக ரூ.551.01 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தவணையுடன், இந்த நிதியாண்டின் முதல் 3 மாதத்தில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.29,613 கோடியை பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT