ம.பி.யில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காவலர்கள் மரியாதை
மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.
இந்தியாம.பி.யில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காவலர்கள் மரியாதை
மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், தடுப்பூசி போடாதவர்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல் துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல்துறையினர் பதக்கங்களை வழங்கி பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய காவல் துறை அதிகாரி, இந்த செயல் தடுப்பூசியின் மீதான அச்சத்தை மக்களிடமிருந்து போக்குவதற்கு உதவும். தடுப்பூசி போடாதவர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவிப்பதாகவும் கூறினார்.