மகாராஷ்டிரத்தில் தொடர் கனமழை: மும்பையில் ரயில்கள் ரத்து
மகாராஷ்டிரத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், சாலைகள், தண்டவாளங்கள் என தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், சாலைகள், தண்டவாளங்கள் என தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் மும்பையில் பல்வேறு இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக மும்பை, தாணே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் முக்கிய சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மும்பை உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தாணே பகுதியிலிருந்து மும்பை வரும் ரயில்களும் நிறுத்து வைக்கப்பட்டுள்ளன.
கரோனா பரவி வரும் சூழலில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் இந்த வாரம் முதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.