ரஜீப் பானர்ஜி (கோப்புப்படம்) 
இந்தியா

மேற்கு வங்க பாஜக தலைவர் ஒரு 'துரோகி': சுவரொட்டியால் பரபரப்பு

மாநில பாஜக தலைவருக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.

DIN

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநில பாஜக தலைவருக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.

மேற்கு வங்க பாஜக தலைவர் ரஜீப் பானர்ஜி ஒரு துரோகி என்று ஹெளரா நகரின் தோம்ஜூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த பானர்ஜி, குடியரசுத் தலைவர் ஆட்சியின் அச்சுறுத்தல்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஜீப் பானர்ஜி ஊழல்வாதி மற்றும் துரோகி. அவரை கட்சித் தலைமை திரும்ப சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று திரிணமூல் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். 

திரிணமூல் தொண்டர்கள் பானர்ஜியை ஏற்க மாட்டார்கள் என்று தோம்ஜூர் எம்.எல்.ஏ. கல்யாண் கோஷ் தெரிவித்துள்ளார். திரிணமூல் தொண்டர்கள் சொல்வதைப் போல பானர்ஜி கட்சிக்கு துரோகம் இழைத்ததாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனித மூளையை பாதிக்கும் புதிய தொற்று! தடுப்பது எப்படி? | Brain eating amoeba

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!

SCROLL FOR NEXT