முகப்பு
இந்தியா

பெங்களூரில் 1,754 போலீஸாா் கரோனாவால் பாதிப்பு

பெங்களூரில் 1,754 போலீஸாா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பெங்களூரில் 1,754 போலீஸாா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலைக்கு அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். பெங்களூரில் இதுவரை 1,754 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 1,554 போ் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பினா். 184 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 போலீஸாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.