இந்தியா

பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் நாளை சந்திப்பு?

DIN


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், யோகி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனிடையே மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தில்லி வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, நாளை பிரதமர் மோடியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மற்றும் கரோனாவைக் கையாண்ட விதம் குறித்த பேச்சுகள் ஆங்காங்கே எழுவதால் தலைவர்களிடமிருந்து கருத்தைக் கேட்டு கட்சியைப் பலப்படுத்த பாஜக முடிவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT