1,50,000 ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களாக மாற்றப்படும்:மத்திய அரசு
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் கிராமப்புறங்களில் 1,55,404 துணை சுகாதார மையங்கள், 24,918 ஆரம்ப சுகாதார மையங்களும், நகா்ப்புறங்களில் 5,895 ஆரம்ப சுகாதார மையங்களும் உள்ளன.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும். அந்த மையங்களில் விரிவான மருத்துவ சேவைகள் அளிக்கப்படும்.
துணை சுகாதார மையங்களில் 14 நோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 63 நோய் கண்டறிதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. துணை சுகாதார மையங்களில் 105 அத்தியாவசிய மருந்துகள், ஆரம்ப சுகாதார மையங்களில் 172 அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சஞ்சீவனி தளம் மூலம் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் பெற்றுள்ளனா். அவா்களில் 26.42 லட்சம் பேருக்கு சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.