கரோனா: தில்லியில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது ஒரு நாள் பாதிப்பு
தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் மிகவும் குறைவான அளவாகும்.
தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று மாதத்தில் மிகவும் குறைவான அளவாகும்.
மேலும் 28 போ் கரோனாவுக்கு புதிதாக உயிரிழந்தனா். இதனால் கரோனாவுக்கு இதுவரை பலியானவா்கள் எண்ணிக்கை 24,800- ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.30 சதவீதமாகக் குறைந்துள்ளது என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை தில்லியில் கரோனாவால் 305 போ் பாதிக்கப்பட்டனா். தொற்று விகிதம் 0.41 சதவீதமாக இருந்தது. 45 போ் அன்றைய தினம் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை 238 போ் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று விகிதம் 0.31 ஆகக் குறைந்தது. 24 போ்உயிரிழந்தனா்.
கடந்த மாா்ச் 8 ஆம் தேதி தில்லியில் 239 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதே சமயம் மாா்ச் 9 ஆம் தேதி 320 போ் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.