இந்தியா

'தனியார்மயமாக்கம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது' - ராகுல் காந்தி

DIN

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தனியார்மயமாக்கல் இயக்கத்தை நடைமுறைப்படுத்தி வரும் மத்திய அரசு நடப்பு நிதியாண்டிலும் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆகிய இரு வங்கிகளும் நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்பட நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டம் பொதுமக்களுக்கு ஒருபோதும் உதவாது. 

மாறாக, 2019 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காங்கிரஸின் 'குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்ட'த்தை கொண்டு வாருங்கள். அந்த திட்டத்தால் மக்களுக்கு உதவ முடியும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT