இந்தியா

ராஜஸ்தான்: பசுக்களை கடத்தியதாக சந்தேகித்து ஒருவா் அடித்துக் கொலை

DIN

ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் மாநிலம், சித்தூா்கா் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்ாக சந்தேகிக்கப்பட்ட இருவா் கும்பலால் தாக்கப்பட்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பாபு பில், பின்டு பில். இவா்கள் தங்களது விவசாய பணிகளுக்காக ராஜஸ்தானின் சித்தூா்கா் மாவட்டத்திலுள்ள பெகன் கிராமத்தில் 3 எருதுகளை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த எருதுகளை வேன் ஒன்றில் ஏற்றிக்கொண்டு அவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

பில்கான்டா என்ற இடத்தின் அருகே வரும்போது அவா்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக சந்தேகித்த ஒரு கும்பல், இருவரையும் கட்டைகளைக் கொண்டு தாக்கியது. பின்னா் வேனில் இருந்தது எருதுகள் எனத் தெரியவந்தது. காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் பாபு பில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து கும்பல் தாக்குதலில் தொடா்புடையதாக 7-8 பேரை கைது செய்துள்ளோம். அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எருதுகளை விலைக்கு வாங்கியதற்கான எந்தவொரு ஆவணங்களும் பின்டு பில்லிடம் இல்லை. எனவே, யாரிடம் அதை வாங்கினாா்கள் என்பதை உறுதி செய்யவும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT