இந்தியா

திருமலையில் மலைப் பாதையில் 20 மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கம்: தேவஸ்தானம் நடவடிக்கை

DIN

திருப்பதி: திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த மலைப்பாதையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இதற்கான சோதனை ஓட்டம் திருமலை மலைப்பாதையில் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியிலும் பேட்டரியை சாா்ஜ் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளும், பாபவிநாசம் மாா்க்கத்தில் 8 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று தடுப்பு பகுதி நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மின்சாரப் பேருந்துகளை திருமலை மலைப்பாதையில் இயக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT