இந்தியா

பிகாரில் ஊரடங்கு தளர்வுகள்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

DIN

பிகார் மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை அடுத்த ஒரு வாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள், சந்தைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதேநேரத்தில்  இரவு ஊரடங்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

மற்றபடி, பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருக்கும். இதர கடைகளும், வணிக வளாகங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வருவதையடுத்து  பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT