இந்தியா

சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் தாஜ் மகால் திறப்பு

ANI

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஜ் மகால், இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தாஜ் மகால் உள்ளிட்ட இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை திறக்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பில், கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தாஜ் மகாலுக்குள் கூட்டம் அதிகம் சேர்வது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT