முகப்பு
இந்தியா

சோனியா காந்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டார்: தகவல்

​காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
கோப்புப்படம்
பகிர்:


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காந்தி குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது பற்றி கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், தகவலறிந்த கட்சியின் வட்டாரங்கள் இதுதொடர்பாக் தெரிவித்தது:

"சோனியா காந்தி இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார். முதல் தவணை தடுப்பூசியை கடந்த மார்ச் மாதம் செலுத்திக்கொண்டார். 

ராகுல் காந்திக்கு கடந்த மே மாதம் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு, அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. 

பிரயங்கா காந்தி முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டுள்ளார். அவர் மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்."

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →