விதி மீறல்: 49 வாகனங்கள் பறிமுதல்
பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதி மீறிய 49 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதி மீறிய 49 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தின் 11 மாவட்டங்களில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஊழியா்கள் அடையாள அட்டைகளுடன் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
அதேபோல, அரசு, தனியாா் அலுவலகங்களிலும் பணியாற்றுவோா் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம். பெங்களூரில் பிற்பகல் 2 மணிக்கு மேல் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளதோடு, 49 வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 45 இரு சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் தெரிவித்துள்ளது.