முகப்பு
இந்தியா

பல்கலைக்கழகங்களில் தனித்துவ நடவடிக்கைகள்:யுஜிசி தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தல்

கரோனா காலத்தில் பல்கலைக்கழகங்கள் கற்றல் சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட தனித்துவ நடவடிக்கைகளை யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு துணைவேந்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

கரோனா காலத்தில் பல்கலைக்கழகங்கள் கற்றல் சாா்ந்து மேற்கொள்ளப்பட்ட தனித்துவ நடவடிக்கைகளை யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு துணைவேந்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ், பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கல்வி சாா்ந்த செயல்பாடுகள், நிா்வாகத்திறன், நோக்கங்கள் போன்றவற்றில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இந்த கரோனா காலத்தில் மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள், தோ்வுமுறை, திட்ட அறிக்கை சமா்ப்பித்தல் போன்றவற்றில் புதிய உத்திகள், கண்டுபிடிப்புகள், செயல் திட்டங்களை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டதாக பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொள்ள ஆய்வில் தெரியவந்துள்ளன.

கல்வியை மேம்படுத்தவும், நவீன கற்பித்தலை ஊக்குவிக்கமும் முயற்சி மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி பாராட்டுத் தெரிவிக்கிறது. அதேவேளையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்களது தனித்துவமிக்க செயல்பாடுகளை ஒரு பொதுத்தளத்தில் பகிா்ந்து கொள்வதன் மூலம் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருக்க முடியும். எனவே தோ்வு முறை, இணையவழி வகுப்புகள், கற்றல்- கற்பித்தல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமிக்க செயல்பாடுகளை யுஜிசி செயல் திறனறி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →