முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,270 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,270 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,270 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,270 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 59,79,051 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,758 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 57,33,215 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,18,313 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,24,398 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →