முகப்பு
இந்தியா

குஜராத் ஆளுநருடன் அமித் ஷா சந்திப்பு

குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து பேசினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது மாநில துணை முதல்வர் நிதின்பாய் படேலும் உடன் இருந்தார். 

குஜராத்தில் கடந்த சிலநாள்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் பகுதியளவு நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் சென்றுள்ள அமித் ஷா காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை சந்தித்து பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.