முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 86.16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 86.16 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
ஒரே நாளில் 69 லட்சம் பேருக்கு தடுப்பூசி
பகிர்:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 86.16 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், உலகிலேயே ஒரு நாளில் அதிகம் தடுப்பூசி போடப்பட்டது இதுவே ஆகும். இதனால் ஒருநாளில் அதிக தடுப்பூசி செலுத்தி உலக அளவில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

நாட்டில் கரோனா தடுப்பூசி இயக்கம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக இருக்கிறது என்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 28.87 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில்(ஜூன் 21) 86.16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு புதிதாக தொற்று  ஏற்பட்டுள்ளது. கடந்த  91 நாள்களில் 50,000க்கும் குறைவாக இன்று பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,62,521-ஆகக் குறைந்துள்ளது. 79  நாட்களுக்குப் பிறகு ஏழு லட்சத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் 2,89,26,038 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 81,839 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து 40-ஆவது நாளாக தினசரி பாதிப்புகளைவிட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 96.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 5 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது; தற்போது இது 3.21% ஆகும்.

தொடர்ந்து 15-வது நாளாக, அன்றாட பாதிப்பு வீதம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக, 2.56 சதவிகிதமாக உள்ளது. இதுவரை 39.40 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →