இந்தியா

கேரளத்தில் இன்று 12,787 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் புதிதாக 12,787 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தரவுகளினபடி,

மாநிலத்தில் புதிதாக 12,787 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நாள்களில் மேலும் 150 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,42,248ஆக, மொத்த பலி எண்ணிக்கை 12,445ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 27,29,967 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும், நோயால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 10.29 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆலங்குடி கோயிலில் குருப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை நிறைவு

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பாளை.யில் அதிமுகவினா் 570 மரக்கன்றுகள் வழங்கல்

ஆறுமுகனேரி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT