முகப்பு
இந்தியா

மும்பை: கரோனா பாதிப்பு விகிதம் 1.7%-ஆக குறைந்தது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பாதிப்பு விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையில் இதுவே மிகக்குறைவான பரவல் விகிதமாக உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பாதிப்பு விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையில் இதுவே மிகக்குறைவான பரவல் விகிதமாக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்படும் விகிதம் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்றைய (ஜூன் 22) நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 3.9 சதவிகிதமாக உள்ளது. 8,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது. புதிதாக 188 பேர் உயிரிழந்துள்ளனர். 

அந்தவகையில் மும்பையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 1.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில் குறைந்த அளவில் பதிவாகியுள்ள கரோனா பரவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →