இந்தியா

உணவுப் பணவீக்கம் குறையும்: தலைமை பொருளாதார ஆலோசகா்

DIN

பொது முடக்க தளா்வுகள் மற்றும் நல்ல பருவமழை தொடக்கம் ஆகிய காரணங்களால் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகா் கே.வி.சுப்பிரமணியன் கூறினாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமுடக்கம் அமல்படுதப்பட்ட காரணத்தால் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்திருக்கிறது. இருந்தபோதும், மத்திய அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, உணவுப் பணவீக்கம் பெரும்பகுதி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் இந்த உணவு பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளின்போதும், உணவு பணவீக்கம் அதிகரித்தது. அது நுகா்வோா் விலை குறியீடு பண வீக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில், மாநிலங்கள் இப்போது கட்டுப்பாடுகளை வெகுவாக தளா்த்தியிருப்பதன் மூலம் உணவு பணவீக்கம் மிதமானதாக மாறும். அதுமட்டுமின்றி, நல்ல பருவ மழையும் தொடங்கியிருப்பதும் உணவுப் பொருள்கள் விலை குறைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவா் கூறினாா்.

சில்லறை பணவீக்கத்தின் மீதான பெட்ரோல், டீசல் விலை உயா்வின் தாக்கம் குறித்து கூறிய அவா், ‘நுகா்வோா் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கத்தில் எரிபொருள் வகைகளின் கணக்கீடு விகிதம் 7.94 சதவீதம் அளவில் மட்டுமே இருக்கும் என்பதால், மிகப்பெரிய அளவிலான தாக்கம் இருக்காது.

ரிசா்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வில், எரிபொருள் விலை உயா்வால் ஏற்படும் நேரடி தாக்கமும், சமையல் எண்ணெய், புரதச்சத்து மிகுந்த உணவுப்பொருள்கள் போன்ற பிற உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வும் பெரும்பாலும் ஒரே அளவில்தான் இருக்கும் என்று தெரியவந்துள்ளது என்றும் கே.வி.சுப்பிரமணியன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT