இந்தியா

தடுப்பூசி செலுத்திக் கொண்டால்.. இதெல்லாம் நன்மைகள் : ஆய்வில் தகவல்

ENS


புது தில்லி: இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், செலுத்திக் கொள்ளாதவர்களுக்குமான வேறுபாடு குறித்த ஆய்வு மூலம் மிக பயனுள்ள பல நல்ல தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவருக்கு கரோனா தொற்று பாதித்தாலும், ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்களும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதும், சிகிச்சைக்கான கட்டணமும், இறப்பு விகிதமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விடவும் மிக மிகக் குறைவு என்று தெரிய வந்துள்ளது.

தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவனைகளிலும் தங்களது காப்பீட்டைப் பெற்றிருந்த 3,820 நோயாளிகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 9 நாள்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சராசரியாக 4.9 நாள்கள் தான் இருந்துள்ளனர்.

தங்களது மருத்துவக் காப்பீட்டை பயன்படுத்திக் கொண்ட 3,820 நோயாளிகளில் 3,301 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். அதாவது 86.4%. 519 பேர் தடூப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அதாவது 13.6 சதவீதம் பேர்.

இந்த ஆய்வில் மேலும் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களில் 8.8 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்பட்டது. இரண்டு தவணைகளும் போட்டுக் கொண்டவர்களுக்கு 3 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்பட்டது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 66% தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது, 81 சதவீதம் இறப்பு விகிதம் தவிர்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் குறிப்பிட்ட சராசரி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், அவ்வாறே சிகிச்சை பெற்றுக் கொண்டாலும் சிகிச்சைக்கான செலவு குறைவாக இருப்பதையும் அந்த காப்பீட்டு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட கரோனா நோயாளிகள் யாருமே மரணமடையவில்லை என்றும் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT