முகப்பு
இந்தியா

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு  51,667: உயிரிழப்பு 1,329 -ஆக குறைவு

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 நாள்களுக்குப் பிறகு 6,12,868 ஆகக் குறைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:


புது தில்லி: நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 நாள்களுக்குப் பிறகு 6,12,868 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை வெளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா அன்றாட பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தொடா்ந்து 8-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 நாள்களுக்குப் பிறகு 6,12,868 -ஆகக் குறைந்துள்ளது. இதுவரை நாட்டில் 2,91,28,267 பேர் தொற்றிலிருந்து குணடைந்துள்ளனர். 

தொடா்ந்து 43-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 64,527 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,329-ஆகக் குறைந்துள்ளது.  இதுவரை3,93,310 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 17,35,781 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 39,95,68,448 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 30,79,48,744 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.