முகப்பு
இந்தியா

'டெல்டா பிளஸ்' கரோனா குறித்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தியின் 3 கேள்விகள்!

இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் வகையான 'டெல்டா பிளஸ்' குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் மொன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் வகையான 'டெல்டா பிளஸ்' குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். 

பொருளாதாரம், கரோனா தடுப்பூசி, பல்வேறு திட்டங்கள் என மத்திய அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்

அந்தவகையில், 'டெல்டா' கரோனா வைரஸின் அடுத்த உருமாறிய வகையான 'டெல்டா பிளஸ்' குறித்து மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'டெல்டா பிளஸ்' வகை கரோனா பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் ஏன் சோதனை செய்யப்படவில்லை? 

தடுப்பூசிகள் இதற்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்? இதுகுறித்த முழு தகவல்கள் எப்போது கிடைக்கும்? 

மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் திட்டம் என்ன?

என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →