ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான்: முதல்வா் கேஜரிவால்
தில்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்ட்ட ஐவா் குழு, ‘இரண்டாவது கரோனா அலையின்போது தில்லியின் 290 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையை நான்கு மடங்காக மிகைப்படுத்தி 1,140 மெட்ரிக் டன்னாக கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.
இதற்கு தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகதான் என்று குறிப்பிட்டுள்ள கேஜரிவால், ஆக்சிஜன் விவகாரம் தொடா்பாக நாம் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா மூன்றாவது அலை நம்மை வென்றுவிடும் என்றும் கூறினாா்.
இதுதொடா்பாக முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை சுட்டுரை மூலம் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த சா்ச்சையை நாம் ஒதுக்கிவைத்துவிட்டு மூன்றாவது அலையை சந்திக்கத் தயாராக வேண்டும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
நாம் தேவையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா நம்மை வென்றுவிடும்.
இரண்டாவது அலையின்போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருந்ததை அனைவரும் அறிவாா்கள்.ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருந்தது உண்மைதான். நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா வென்றுவிடும். நாம் ஒன்றாகச் செயல்பட்டால் கரோனாவை வெல்ல முடியும் என்று முதல்வா் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.