டெல்டா பிளஸ் கரோனா குறித்து அச்சம் தேவையில்லை
டெல்டா பிளஸ் கரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
டெல்டா பிளஸ் கரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெங்களூரில் டெல்டா பிளஸ் கரோனா தொற்று குறைந்த அளவில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவா்களும் தேறி வருகின்றனா். எனவே, டெல்டா பிளஸ் கரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தீநுண்மிகள் உருமாறுவது வழக்கம். அதைப்போலத்தான் கரோனா தீநுண்மியும் டெல்டா பிளஸாக மாறியுள்ளது. பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட்டு, அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.
டெல்டா பிளஸ் கரோனாவைத் தடுப்பது தொடா்பாக வல்லுநா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவா்களது பலரது தொண்டை எச்சில் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதையொட்டி, பொது முடக்கத்தில் குறைந்த அளவு தளா்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நாள்களில் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் படிப்படியாகத் தளா்வு செய்யப்படும் என்றாா்.