முகப்பு
இந்தியா

மத்திய அரசின் கடன் சுமை ரூ.116.21 லட்சம் கோடி

மத்திய அரசின் கடன் சுமை 2021 மாா்ச் இறுதி நிலவரப்படி ரூ.116.21 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

மத்திய அரசின் கடன் சுமை 2021 மாா்ச் இறுதி நிலவரப்படி ரூ.116.21 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதி நிலவரப்படி அரசின் மொத்த கடன் பொறுப்பு ரூ.116.21 லட்சம் கோடியாக உள்ளது. இது, 2020 டிசம்பா் காலாண்டு இறுதியில் காணப்பட்ட கடன் சுமையான ரூ.109.26 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 6.36 சதவீதம் அதிகமாகும்.

2021 மாா்ச் இறுதியில் காணப்பட்ட மொத்த கடன் சுமையில் பொதுக் கடனின் பங்களிப்பு 88.10 சதவீதம் அளவுக்கு இருப்பதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

2020-21 ஜனவரி-மாா்ச் காலாண்டில் மத்திய அரசு ரூ.3,20,349 கோடி மதிப்பிலான கடன்பத்திரங்களை வெளியிட்டது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மத்திய அரசின் கடன்பத்திர வெளியீடு ரூ.76,000 கோடியாக காணப்பட்டது. அதேநேரம், திரும்பச் செலுத்தப்பட்ட தொகை ரூ.29,145 கோடியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →