மாநிலங்களின் கையிருப்பில் 1.15 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.15 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 1.15 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் விவரம்:
"இந்திய அரசு விலையில்லாமல் வழங்கியது, மாநிலங்கள் நேரடிக் கொள்முதல் மூலம் பெற்றது என மொத்தம் 31,51,43,490 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வீணானவை உள்பட மொத்தம் 30,35,97,466 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,15,46,024 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
மேற்கொண்டு 20,48,960 தடுப்பூசிகள் அடுத்த 3 நாள்களில் வழங்கப்படவுள்ளன."
நாடு முழுவதும் கடந்த ஜூன் 21 முதல் மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.