முகப்பு
இந்தியா

உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: மாயாவதி

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜூன், 2021 at 2:13 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:00 AM


உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

"எதிர்வரும் உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக செய்தித் தொலைக்காட்சி ஒன்று நேற்று முதல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது, துளியும் உண்மையில்லாதது. பகுஜன் சமாஜ் கட்சி இதை மறுக்கிறது.

Advertisement

பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேச, உத்தரகண்ட் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுகிறது என்பதையும் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்த கட்சி விரும்புகிறது."

இந்த குழப்பத்தைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சதீஷ் சந்திரா மிஸ்ரா ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் குறித்த செய்திகளை வெளியிடும் முன் மிஸ்ராவைக் கலந்தாலோசித்து வெளியிடுமாறும் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளார். 

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.