முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 8,063 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 8,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 8,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 85,445 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 8,063 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் 1,100, திரிசூர் 944, கொல்லம் 833, மலப்புரம் 824 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,88,894ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 110 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,879ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 11,529 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,87,496ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 96,012 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 3,90,230 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.