முகப்பு
இந்தியா

அரசு நடவடிக்கைகளால் லடாக் மக்கள் மகிழ்ச்சி: ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் நடவடிக்கைகளால் லடாக் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜூன், 2021 at 2:55 PM
ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)
பகிர்:

மத்திய அரசின் நடவடிக்கைகளால் லடாக் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு 3 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். நேற்று அவர் முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடிய நிலையில், இன்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். 

லடாக்கில் கரூ ராணுவ தளவாடத்தில் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசி உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினார். 

Advertisement

பின்னர் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது என்று ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.

லடாக் மக்களுடன் பேசும்போது அவர்களது மகிழ்ச்சியை உணர முடிவதாக மக்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் தெரிவித்ததாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.